RRR Others USA
www.garudabazaar.com

பாப்கானை கொறித்தபடி பக்கத்துல பார்த்தா.. ஜோடியாக இருந்தது யார் தெரியுமா? செம குஷி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடியாக சென்று "ராக்கி" படத்தை திரையரங்கில் பார்த்துள்ளனர்.

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் ராக்கி. தர்புகா சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துபாய் அரசு மூலம் மிகப்பெரிய கௌரவத்தை பெற்ற நடிகை அமலாபால்! முழு விபரம்!

ரவுடி கதை

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

ராக்கி படத்தில் மணிமாறனாக பாரதிராஜாவும், ராக்கியாக வசந்த் ரவியும் நடித்திருந்தனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆன பிறகும் படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அசத்தல் நடிப்பு

பாரதிராஜாவின் நடிப்பு ஒரு பக்கம் என்றால், வசந்த் ரவி நடிப்பு இன்னொரு பக்கம் என்று இப்படத்தை தூக்கி நிறுத்தினார்கள்.  வசந்த் ரவி ஏற்கனவே "தரமணி" என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையிலிருந்து பிழைக்க வந்த ராக்கியின் தந்தை சென்னையில் டானாக (Don) இருக்கும் பாரதிராஜாவிடம் அடியாளாக சேர்கிறார். அப்பாவிற்கு பிறகு இவரும் அதே வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த வருஷம் இத்தனை பேர் மாறிட்டாங்களா? சீரியலை விட்டு விலகிய நடிகர் நடிகைகள்!

பழிவாங்குதல்

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

ஒரு சந்தர்ப்பத்தில் பாரதிராஜாவின் மகன் ராக்கியின் அம்மாவை கொலை செய்ய அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் ராக்கி படத்தின் அசத்தலான கதை. பல ரவுடிசம் சார்ந்த படத்தை பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களுக்கு, இந்த படம் சற்று வித்தியாசமாகவே இருந்து, அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஜோடியாக விசிட்

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

ரசிகர்கள் ஒரு பக்கம் இந்த படத்தை பார்த்து கொண்டிருக்க, இந்த படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சமீபத்தில் சென்னையில் உள்ள எஸ்கேப் திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். இருவரும் படம் பார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றது. அதை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

பாப்கானை கொறித்தபடி பக்கத்துல பார்த்தா.. ஜோடியாக இருந்தது யார் தெரியுமா? செம குஷி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara watched Rocky movie in Escape theatre.

People looking for online information on நயன்தாரா, விக்னேஷ் சிவன், Nayanthara, Rocky, Vignesh shivan will find this news story useful.