Breaking: ஷங்கர்-கமலின் ‘இந்தியன் 2’-வில் ‘துப்பாக்கி’ Connect
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 15, 2019 10:27 PM
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'இந்தியன்'. லஞ்சம், ஊழல் பற்றி பேசிய இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மேயாத மான், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் 'துப்பாக்கி', 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுத் ஜாம்வால் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளார்.
Tags : Vidyut Jamwal, Indian 2, Kamal Haasan, Shankar