துருவ் விக்ரமின் ஆதித்யா வர்மா ஷூட்டிங் குறித்த அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 15, 2019 09:46 PM
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்துக்கு ரதன் இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து இந்த படம் ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்காவே ஹிந்தியிலும் இயக்கினார். இந்த படத்தில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழில் இந்த படம் ஆதித்யா வர்மா என்ற பெயரில் உருவாகிவருகிறது. இந்த படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார்.
இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்து நிறைவு பெற்றுள்ளதாம். இதுகுறித்து துருவ் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.