#Breaking வெற்றிமாறன் - சூரி படம் - இது தான் ஃபர்ஸ்ட் டைம்.. வெற்றிமாறனின் புது ஆடுகளம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தை பற்றி தகவல் தெரியவந்துள்ளது.

vetrimaran to shoot in a new location for soori film

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷை வைத்து இவர் இயக்கிய ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியை வைத்து படம் இயக்கவுள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபொடெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்திற்கான லொக்கேஷன் பார்க்கும் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மஸ்கட் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் படப்பிடிப்புக்கான லொக்கேஷனை வெற்றிமாறன் அன்ட் டீம் பார்த்துவிட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை சென்னையிலும் கிராம புறங்களிலுமே படப்பிடிப்பு நடத்தியுள்ள வெற்றிமாறன், இந்த படத்திற்காக முதல் முறையாக ஃபாரின் பறக்கிறார்.

Entertainment sub editor