சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் பாலிவுட்டை சேர்ந்த ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அந்த ஆண்டு திரைத்துறையில் சிறப்பாக பங்களிப்பாற்றிய கலைஞர்களை உற்சாகமூட்டும் விதமாக இங்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனர் (Best Director) விருது, தனுஷை வைத்து ’அசுரன்’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு தரப்பட்டது. இந்த கெளரவத்தை இயக்குநரும் நடிகருமான அமீர் அவருக்கு வழங்கினார்.
தொகுப்பாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தனுஷ் நடிக்கும் வடசென்னை 2 படத்திற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விருதுக்கு நன்றி தெரிவித்த அவர், ஒரு படத்தின் வெற்றி புறக்காரணங்களாலும் நிகழ்வது என்று தனது குரு பாலுமகேந்திரா கூறியதை மேற்கோள் காட்டினார்.
மேலும், திரைப்படம் ஒரு கூட்டுமுயற்சி, அதில் இயக்குநர் மற்றும் குழுவினர் காட்டும் 100 சதவீத ஈடுபாடும், இறுதியில் அடையும் திருப்தியுமே முக்கியமானது என தெரிவித்தார்.
வெற்றிமாறன் ரிப்ளை – ‘தனுஷ் தவிர எந்த ஹீரோ கூட படம் பண்ணுவிங்க?’ வீடியோ