’அசுர’ இயக்குநரை இந்த விஷயத்தை நோட் பண்ண சொன்ன விக்னேஷ் சிவன்!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 01:10 PM
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு படத்தையும், சூரியை வைத்து மற்றொரு படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதில் சூர்யா நடிக்கும் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகின.

வெற்றிமாறனின் ஆடுகளம், விசாரணை போன்ற படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரிய அங்கீகாரங்களைபெற்றுள்ளன. மேலும் அவர் முதல் படமான பொல்லாதவன் ’கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. இதன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் நேற்று ஆஸ்கார் விருதுக்கான இறுதி பட்டியல் வெளியானது. இதில் கொரிய படமான ’பேரசைட்’டுக்கு 6 விருதுகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. இதை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்த விக்னேஷ் சிவன்,’இந்த பட்டியல், திரைப்படம் உலகின் எந்த பகுதியில் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி ஆஸ்கார் விருதுக்கான தகுதியை அடைய முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இத நோட் பண்ணுங்க சார்’ என்று வெற்றிமாறனை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார்.
Inspiring to see #Parasite - the MasterPiece from #BongJoonHo - a socio-political thriller on class warfare getting this much acknowledgement from @TheAcademy 👏🏻
— Vignesh Shivan (@VigneshShivN) January 14, 2020
Gives the Hope that any film from any part of the world can become an OscarWinner ! @VetriMaaran note pannunga sir😇 pic.twitter.com/UPMoBRXI5k