’அசுரன்’ தெலுங்கு ரீமேக் டீம் தமிழ்நாட்டுக்கே வருவது இந்த அதிரடி ரீசனுக்கு தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் பெயரை பெற்றது. இந்த படம் அதே சூட்டில் தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது.

Dhanush, Vetrimaaran, Naarappa Asuran remake team in tamilnadu kurumalai for fight scene

’நாரப்பா’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க பிரியாமணி நாயகியாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இப்படத்தை அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

ஸ்ரீகாந்த அதலா இயக்கும் இந்த படத்தில் உள்ள அதிரடி சண்டைக்காட்சிகள் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கிறார். இந்த காட்சிகளை படமாக்கத்தான் நாரப்பா டீம் தமிழகத்தில் உள்ள குறுமலை பகுதிக்கு வந்துள்ளனர். இது முடிந்த உடன் வெங்கடேஷின் மிச்ச போர்ஷன்கள் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் படமாக்கப்பட உள்ளது. படம் இந்த ஆண்டு கோடையில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Entertainment sub editor