வெற்றிமாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் டிரெய்லர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் சூரியை வைத்து ஒரு படத்தையும், சூர்யாவை வைத்து ஒரு படத்தயும் எடுக்க திட்டமிட்டுள்ளார். சூர்யா நடிக்கும் படத்தை கலைப்புல்லி எஸ்.தாணு தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்று ஏற்கெனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Baaram Official Trailer Vetri Maaran National Award Winning Feature Film Priya Krishnaswami R Raju

இந்நிலையில் வெற்றிமாறன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனமான Grass Root Film Company சார்பில் ’பாரம்’ என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில இடங்களில் புழக்கதில் உள்ள ’தலைக்கூத்தல்’ எனும் அவலத்தை இந்த படம் சித்தரிக்கிறது.

முதிர் வயது தாய் தந்தயரை கைவிடும் பிள்ளைகளின் வாழ்க்கையை இந்த திரைப்படம் சித்தரிக்கிறது. சர்வதேச திரை விழாக்களில் விருது வென்றுள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரைக் காண கீழுள்ள காணொளியை சொடுக்கவும்.

வெற்றிமாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ‘பாரம்’ படத்தின் டிரெய்லர் இதோ! வீடியோ

Entertainment sub editor