'அசுரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன், சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன் தனது கிராஸ்ரூட் புரொடக்ஷன்ஸ் சார்பாக கடந்த வருடம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பெற்ற பாரம் படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளிாகியுள்ளது.
இந்த படத்தை பிரியா கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சுப முத்துக்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெற்றிமாறன் வழங்கும் தேசிய விருது பெற்ற 'பாரம்' பட டீஸர் இதோ வீடியோ
Tags : Vetrimaaran, Baaram, Priya Krishnasamy