தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெற்றிபெற்ற ‘அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Asuran Movie Telugu Remake Dhanush Vetrimaaran Naarappa shoot begins

2019 அக்டோபர் 4ம் தேதி வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியான வரவேற்பையும் பெற்று 100 கோடி ரூபாய் வசூல் சாதனையும் படைத்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

எழுத்தாளர் பூமணி எழுதிய ’வெக்கை’ நாவலை அடிப்படையாக கொண்ட இந்த படம் சாதிய வேற்றுமைகளுக்குள் வேரோடிய வன்முறை பற்றி பேசியது. இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

இதில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கிறார். தமிழில் இப்படத்தை தயாரித்த எஸ்.தாணு சுரேஷ் பாபுவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். நடிகை பிரியாமணி இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியதையடுத்து போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்துக்கு ’நாரப்பா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Entertainment sub editor