வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் – அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 13, 2020 07:28 PM
இயக்குநர் வெற்றிமாறனின் முதல் படமான ’பொல்லாதவன்’ தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. தமிழில் 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷுடன், திவ்யா ஸ்பந்தனா, பானுபிரியா, டேனியல் பாலாஜி, சந்தானம், கருணாஸ் என்று ஏராளமானோர் நடித்துள்ளனர்.

ஆசை ஆசையாக ஒரு பைக்கை வாங்கும் இளைஞனின் வாழ்வில் அது பல நல்ல விஷயங்களை கொண்டு வருகிறது. அதே பைக் காணாமல் போவதில் இருந்து அவனுக்கு நடக்கும் வாழ்வா சாவா போராட்டம் தான் பொல்லாதவனின் மையக்கதை. பொல்லாதவனின் திரைக்கதை, கதை சொல்லல் முறை ஆகியன விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த கதை தற்போது Guns of Banaras என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வர உள்ளது. ஷேக்கர் சூரி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Guddu Shukla se mil ke Khushi hui. Best wishes to #KaranNath and the team of #GunsOfBanaras pic.twitter.com/LXo4Tv9dcS
— Boney Kapoor (@BoneyKapoor) January 13, 2020