பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தர்ஷன். இலங்கையை பூர்வீகமாக கொண்டிருந்த அவர் மாடலிங் மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுருக்கும் தர்ஷன் ஒரு சர்ப்ரைஸ் செய்தியை தெரிவித்துள்ளார்:

‘இது என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒரு நாள். என் முதல் திரைப்படத்துக்காக நான் கையெழுத்தான நாள். நெடு நாட்களாக கதை கேட்டு வந்த நான் தற்போது தான் இதயத்துக்கு நெருக்கமான ஒரு கதையை கண்டடைந்தேன்’ என்று கூரிய அவர், திரைப்படம் குறித்து கூடுதல் விவரத்தை தற்போது கூறமுடியாது என தெரிவித்தார்.
இன்னும் சிறிது நாட்களில் வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்கினூடாக அனைவரும் விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள் என கூறிய அவர். முதல் படத்திலேயே பெரிய டீமுடல் பணியாற்றுவது சந்தோஷம் அளிப்பதாகவும், தனக்காக ஊடகத்தில் பக்கங்கள் நடத்தும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.