தனுஷ் - வெற்றிமாறனின் 'அசுரன்' 100வது நாள் விழா - ''என்னைப் பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு''
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 13, 2020 01:58 PM
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான 'அசுரன்' திரைப்படம் தற்போது 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற 100வது நாள் கொண்டாட்ட விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணு, கென், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய டிஜே அருணாச்சலம் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக தன்னை வெற்றிமாறனிடம் அறிமுகப்படுத்திய ஆண்ட்ரியாவிற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் இந்த படத்தில் அவர் பாடிய 'ஏ மினுக்கி' பாடலை பாடினார்.
பின்னர் பேசிய கென், ''வெற்றிமாறன் சாருக்கு நன்றி. காரணம் வெற்றி மாறன் சாரால தான் இந்த ஸ்டேஜில் நான் இருக்கேன். எனக்கு கிடைத்த எல்லா பெயர், புகழ் என அனைத்திற்கும் காரணம் வெற்றிமாறன் சார் தான்.
தனுஷ் சார் கூட தான் அதிகமான காட்சிகள் வந்திருந்தது. ஆனால் தனுஷ் சார் என் கூட நல்ல பழகுனதுனால தான் என்னால் ஈஸியா பண்ண முடிஞ்சுது. அப்புறம் எங்க அண்ணன் டீஜேவிற்கு நன்றி. அவர் என்ன பத்தி பேசவே வேண்டாம், சும்மா எல்லாருக்கும் தேங்க் பண்ணிட்டு வந்துருனு சொல்லிட்டாரு'' என்று பேசினார்.
தனுஷ் - வெற்றிமாறனின் 'அசுரன்' 100வது நாள் விழா - ''என்னைப் பத்தி பேச வேண்டாம்னு சொல்லிட்டாரு'' வீடியோ