தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இருந்து வெறித்தனம் பாடல் லீக்கானதா? - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Verithanam song from Thalapathy Vijay's Bigil song not leaked

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் முதன்முறையாக வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த வெறித்தனம் என்ற பாடல் தற்போது லீக்காகியுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி அந்த செய்திகளில் துளியும் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.