“அவன ரொம்ப புடிச்சிருக்கு! ஆனா அடுத்தக்கட்டம்...” - சேரப்பாவிடம் கவின் பற்றி மனம் திறந்த லாஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 22, 2019 01:12 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவினிடம் நெருக்கமாக பழகி வரும் லாஸ்லியா சேரன் அப்பாவிடம் முதன் முறையக பகிர்ந்துக் கொள்ளும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே அபிராமி, ஷெரின், சாக்ஷி, லாஸ்லியா ஆகிய பெண் போட்டியாளர்களிடம் Flirt செய்து விளையாடிய கவின், ஒரு கட்டத்தில் பெண்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார் என்ற பகிரங்கமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதையடுத்து, அனைவரிடத்திலும் நட்பாகவே தான் பழகி வருவதாக கவின் கூறிய நிலையில், சாக்ஷி அவர் மீது கோபப்பட்டார். அதன் காரணமாக சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டில் கவின் - சாக்ஷி- லாஸ்லியா ஆகியோரிடையே முக்கோண காதல் சர்ச்சைகள் நிலவின.
ஆனால், ஆரம்பத்தில் இருந்தே, கவினுக்கு லாஸ்லியாவை பிடிக்க, லாஸ்லியாவிற்கும் கவினை பிடித்திருப்பது பார்ப்பவர்களுக்கு தெளிவானது. இது பற்றி முதன் முறையாக லாஸ்லியா சேரன் அப்பாவிடம் பகிர்ந்துக் கொண்ட புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ‘கவினை முன்பை விட இப்போது அதிகம் பிடிச்சிருக்கு.. தப்போ சரியோ நிறைய விஷயங்களில் கவின் என் பக்கம் நிற்கிறார். அவருடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெளி உலகம் எங்களை பற்றி என்ன நினைக்கிறது என்று தெரிந்துக் கொள்ள அவசியம் இல்லை. ஆரம்பத்தில் இருந்து ஆதரவாக இருக்கும் அவருக்காக நான் நிற்பேன். இது அடுத்தக்கட்டத்திற்கு போவது குறித்து வெளியே சென்ற பிறகு முடிவு எடுப்போம்’ என தெரிவித்தார்.
இதுவரை நட்பு மட்டுமே இருப்பதாக கூறி வந்த லாஸ்லியா-கவின் இடையே அதையும் தாண்டி புனிதமான உறவு ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது. எனினும், இந்த வீட்டிற்குள் நட்புடனே பழக இருவரும் முடிவில் இருக்கிறார்கள் போல..
“அவன ரொம்ப புடிச்சிருக்கு! ஆனா அடுத்தக்கட்டம்...” - சேரப்பாவிடம் கவின் பற்றி மனம் திறந்த லாஸ்! வீடியோ