‘குழந்தை மாதிரி பாத்துப்பேன்...’ - பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இடையே மலர்ந்துள்ள காதலை வெளிப்படுத்தும் புரொமோ வெளியாகியுள்ளது. 

Bigg Boss 3 Tamil Vijay Tv Hotstar Kavin Losliya love Promo 3

பிக் பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே லாஸ்லியா மற்றும் கவின் இடையே நட்பையும் தாண்டி புனிதமாக ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருப்பதாக பார்வையாளர்கள், ஹவுஸ்மேட்ஸ் என அனைவரும் யூகித்து வந்த நிலையில், இன்றைய எபிசோடின் புரொமோக்களில் இருவரும் அதனை உறுதிப்படுத்தினர்.

முதல்  புரொமோவில், லாஸ்லியாவும், சேரனும் மாறி மாறி கவினையும் அவரது குணம், பண்புகளை பற்றி புகழ்ந்து பேசினர். அதைத் தொடர்ந்து வெளியான புரொமோவில், கவினை முன்பை விட ரொம்ப புடிச்சிருக்கு.. தப்போ சரியோ நிறைய விஷயங்களில் கவின் என் பக்கம் நிற்கிறார். இது அடுத்தக்கட்டத்திற்கு போவது குறித்து வெளியே சென்ற பிறகு முடிவு எடுக்கணும் என்று கூறினார்.

அதையடுத்து தற்போது வெளியாகியுள்ள 3வது புரொமோவில், கவின் மற்றும் லாஸ்லியா இடையிலான உரையாடலில் இருவருக்கும் இடையே இருக்கும் காதல் உறுதியானது. லாஸ்லியாவை குழந்தை போல் பார்த்துக் கொள்வதாக கவின் உறுதியளித்தார். இந்த உறுதி எதன் அடிப்படையில் வந்தது என்பது இன்றைய எபிசோடில் எதிர்ப்பார்க்கலாம்.

‘குழந்தை மாதிரி பாத்துப்பேன்...’ - பிக் பாஸ் வீட்டில் மய்யம் கொண்ட கவின் லாஸ்லியா காதல் புயல்!! வீடியோ