ஹீரோ சிவகார்த்திகேயனின் வில்லனுடன் பிரபல இயக்குநர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 23, 2019 07:56 PM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிஎஸ் மித்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அபய் தியோலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஹீரோவின் வில்லனுடன் என்று பகிர்ந்துள்ளார்.
With the #Villain of #Hero @AbhayDeol pic.twitter.com/BQPG9IxJIX
— PS Mithran (@Psmithran) August 22, 2019