சாண்டி, தர்ஷன் லட்டு தின்ன ஆசையா..! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 23, 2019 10:03 AM
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ஏற்கனவே கிண்டர் கார்டன் பள்ளி குழந்தைகள் டாஸ்க் முடிந்துவிட்டது.

இந்த டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதாக லாஸ்லியா மற்றும் சாண்டி தேர்வு செய்யப்பட்டனர். டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகளில் சிறந்தவராக சேரன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து லாஸ்லியா, சாண்டி, சேரன் ஆகிய மூவரும் இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மீண்டும் இரண்டு டாஸ்குகள் கொடுக்கப்படுகிறது. முகின், கவின் ஆகிய இருவருக்கும் தட்டில் இருக்கும் மாவை வாயால் ஊதித்தள்ளும் போட்டியும், தர்ஷன், சாண்டி ஆகிய இருவருக்கும் யார் அதிக லட்டுகள் சாப்பிடுகிறார்கள் என்ற போட்டியும் நடைபெறுகிறது. இதில் இருவருமே சம அளவில் லட்டுகள் சாப்பிட்டதாக நடுவர் சேரன் அறிவிக்கின்றார்.
தினமும் ஏதாவது பிரச்சனை செய்யும் வனிதா, பிரச்சனைகளில் சிக்கி கொள்ளும் கஸ்தூரி ஆகியோர் இன்றைய டாஸ்குகளின்போது அமைதியாக இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது.
#Day61 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/uPkEoxOC3b
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019
சாண்டி, தர்ஷன் லட்டு தின்ன ஆசையா..! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ! வீடியோ