விஜய் ஆண்டனியின் "காக்கி" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 23, 2019 10:39 AM
இயக்குனர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், இயக்குனர்

ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.
விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய்,
ரவி மரியா சன் டீவி புகழ்'கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் "காக்கி"
இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், 'கவிப்பேரரசு' வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் - ஷியாம் - ன் அதிரடி காட்சி அமைப்பில், தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனித்துக் கொள்கிறார். இப்படம் அதிரடி காட்சிகளின் பின்னணியில் உருவாகி வரும் ஒரு ஜனரஞ்சகமான குடும்பப் பாங்கானப் பொழுதுபோக்குப் படமாகும்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின் எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்ட பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்கிட தீர்மானித்தித்தது.மேலும், தயாரிப்பாளர் "ஓபன் தியேட்டர்" உடன் இணைந்து, மார்க்கட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்துப் பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 2020ல் இப்படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், "பர்ஸ்ட் லுக்" போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர் | டிரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட இப்படக்குழு முடிவு செய்திருக்கிறது.