www.garudabazaar.com

வெங்கட் பிரபு இயக்கும் CUSTODY.. வெளியான அரவிந்த் சாமியின் கேரக்டர் லுக் & பெயர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார்.

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மாரி செல்வராஜூடன் நடிகர் வடிவேலு.. ரிலீஸ்க்கு தயாராகும் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்!

புது வருடத்தை ஒட்டி வெளியான இந்த படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரத்தை ரேவதி என படக்குழு அறிவித்துள்ளது. அவரது கதாபாத்திரத்திற்கான முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு, ‘அழகும் திறமையும் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி ‘கஸ்டடி’ படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர். 

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

Images are subject to © copyright to their respective owners.

அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

Images are subject to © copyright to their respective owners.

நாக சைதன்யா அக்கினேனி இதுவரை கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே ‘கஸ்டடி’ அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம் ஆகும். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

Images are subject to © copyright to their respective owners.

பிரம்மாண்டமான பொருட்செலவு மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் தயாராகி வருகிறது. பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி படத்தின் வசனம் எழுத எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா & யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

Images are subject to © copyright to their respective owners.

உலகம் முழுவதும் ’கஸ்டடி’ திரைப்படம் திரையரங்குகளில் மே 12, 2023-ல் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்த்சாமியின் கதாபாத்திர லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராஜூ என்கிற ராஜ்ஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | சுஷ்மிதா சென்னுக்கு ஏற்பட்ட மாரடைப்பு.. சிகிச்சை குறித்து வெளியிட்ட உருக்கமான தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu Custody Movie Aravind Swamy Character Look Poster

People looking for online information on Aravind Swamy, Custody, Custody Movie, Venkat Prabhu will find this news story useful.