www.garudabazaar.com

மாரி செல்வராஜூடன் நடிகர் வடிவேலு.. ரிலீஸ்க்கு தயாராகும் 'மாமன்னன்' படத்தின் அடுத்த அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படம் குறித்த புதிய அப்டேட்டை ரெட் ஜெயன்ட் மூவிஸ்‌ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Vadivelu with Mari Selvaraj Mamannan Dubbing Work Started

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கௌதம் கார்த்திக் உடன் மஞ்சிமா மோகன்.. அந்த கேப்சன் தான் ஹைலைட்டே! 😍 CUTE PHOTO!

மாமன்னன்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்தாண்டு மார்ச்-4 ல் துவங்கியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என கூறப்படுகிறது.

Vadivelu with Mari Selvaraj Mamannan Dubbing Work Started

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

தற்போது சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், சில நாட்களுக்கு மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டது.

Vadivelu with Mari Selvaraj Mamannan Dubbing Work Started

Images are subject to © copyright to their respective owners.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

மாமன்னன் டப்பிங்

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் வடிவேலு துவங்கி உள்ளார் என ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மாரி செல்வராஜ் மேற்பார்வையில் வடிவேலு டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

Also Read | SSMB28: புது லுக்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.. மனைவி நம்ரதா பகிர்ந்த மாஸ் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vadivelu with Mari Selvaraj Mamannan Dubbing Work Started

People looking for online information on Mamannan, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.