சிம்பு நடித்த 'மன்மதன், 'வல்லவன், 'வானம்', 'வல்லவன்', 'சிலம்பாட்டம், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' போன்ற படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா ஏற்கனவே இசையமைத்துள்ள நிலையில் தற்போது சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அரசியல் த்ரில் படம் 'மாநாடு'. சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து இம்மாத இறுதியில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக சிம்பு, லண்டன் சென்று தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க யுவன்ஷங்கர்ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். இதனை வெங்கட்பிரபுவும், யுவனும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.
And yes we are back!!! Here is the update which u guys kinda know by now!! But now it’s official 😉!!! Me and @thisisysr are back for #str ‘s #maanaadu #avppolitics #vp9 @sureshkamatchi #isaimaanaadu #HappyEid my brother!!! 🤗 pic.twitter.com/iRE19FQZBS
— venkat prabhu (@vp_offl) June 5, 2019