இசைஞானி இளையராஜாவின் லைவ் இசை குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

வரும் ஜூன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் அன்று, மிக பிரம்மாண்டமான நேரடி இசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இசை செலிப்ரேட்ஸ் இசை’ என்ற இந்த இசை கச்சேரியில் கொண்டாடப்படும் பிரபல பின்னணி பாடகர்கள் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடவுள்ளனர். இம்முறை முதன் முறையாக கிட்டதட்ட 100 இசை கலைஞர்கள் இளையராஜாவுடன் ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கவுள்ளனர்.
இது பற்றி பேசிய யுவன், ‘லைவ் மியூசிக், லைவ் மியூஸ்க் ஆர்ட்டிஸ்ட்கள் மீது எப்போதும் அப்பாவுக்கு அதிக பிரியம். அப்பாவோட கனவில் இதுவும் ஒன்று. இந்தியாவிலேயே மிகப்பெரிய லைவ் ஆர்க்கெஸ்ட்ரா என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. அப்பாவோட இசை என்றைக்குமே லைவாக தான் இருக்கும். எளிமையாக நம்முடன் இணைத்துக்கொள்ளவும், இன்றைய புதிய தலைமுறையினரும் அப்பாவின் இசையை நேசிப்பதற்கும் அதுதான் காரணம் என நம்புகிறேன்’.
என்னுடைய மறக்க முடியாத ரீரெக்கார்டிங் செஷன் என்றால் அது‘அஞ்சலி’ படம் தான். அந்த படத்தில் வரும் ‘மொட்ட மாடி மொட்ட மாடி’ பாடலை நான், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, பவதாரிணி, பிரேம்ஜி என அனைவரும் பாடினோம். அதில் இடையில் வரும் ஆங்கில் வசனம் ஒன்றை நான் பேசினேன். அப்போது அப்பா, யுவன் இதை மைக்கேல் ஜாக்சன் மாதிரி சொல்லு என்றார். அது மறக்க முடியாது என யுவன் ஷங்கர் ராஜா கூறினார்.
இந்த பிரம்மாண்டமான இசை கச்சேரி, சினி இசை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நடத்தப்படும் ஒரு சமர்ப்பனம். இந்நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ளதால், கூடுதல் சிறப்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை. வரும் ஜூன்.2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை இவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கீழே உள்ள லிங்க் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
“இந்த பாட்ட மைக்கேல் ஜாக்சன் மாதிரி பாடுன்னு அப்பா சொன்னாரு..” வீடியோ