'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி', 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'ஒரு கன்னியும், மூன்று களவானியும்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்தவர் சிம்பு தேவன்.

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் இறுதியாக தளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘கசடதபற’ எனும் திரைப்படத்தை சிம்பு தேவன் இயக்கவிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி நிறுவனமும், ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள் பணிபுரியுள்ளனர். அதன்படி, இப்படத்தில் பணியாற்றவிருக்கும் ஒளிப்பதிவாளர்கள், எட்டிட்டர்கள், இசையமைப்பாளர்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் அரவிந்த் ஆகாஷ், ஹரீஷ், பிரித்வி, விஜயலக்ஷ்மி, வெங்கட் பிரபு, சந்தீப், பிரியா பவானி ஷங்கர், பிரேம்ஜி, ரெஜினா, சாந்தனு, சம்பத் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவிருக்கின்றனராம்.