www.garudabazaar.com

வாரிசு படத்தின் "வா தலைவா" பாடல் பீட்.. தமன் பகிர்ந்த தெறி வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா முன் தயாரிப்பு குறித்த வீடியோவை தமன் வெளியிட்டுள்ளார்.

Thaman S Shared a Video Vaa Thalaivaa Beat Sound Check

Also Read | "நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட".. TTF வாசனை புகழ்ந்து தள்ளிய G.P. முத்து!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  வா தலைவா பாடலை இசைக்க ஒத்திகை செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதிகாலை 3 மணிக்கு இந்த பாடலின் ஒத்திகை நிகழ்ந்ததாக தமன் குறிப்பிட்டுள்ளார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

Also Read | துபாய் வானத்தில் பறந்து 'துணிவு' படத்தின் வேறலெவல் ப்ரோமோஷன்.. செம்ம வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Thaman S Shared a Video Vaa Thalaivaa Beat Sound Check

People looking for online information on S Thaman, Vaa Thalaivaa Beat Sound Check, Varisu, Varisu Audio launch, Vijay will find this news story useful.