விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார்.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் 7 பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். அதில், முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ஃபாத்திமா பாபு முதல் நபராக வெளியேறினார்.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக மக்களுக்கு தெரியவருகிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அபிராமி தேர்வாகியுள்ளார். இந்நிலையில், முதல் டாஸ்க்காக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை போட்டுத்தள்ளும் டாஸ்க் வனிதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொலையாளியான வனிதா, முகெனுடன் கூட்டு சேர்ந்து சாக்ஷியின் மேக்-அப்பை களைத்து அவரை பேயாக அலையவிடுவது தான் முதல் டாஸ்க். அதனை வெற்றிகரமாக முடித்த வனிதா அடுத்த விக்கெட்டை வீழ்த்த கூட்டாளி முகெனுடன் திட்டம்தீட்டுகிறார். இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வாத்தியாரே ஃபர்ஸ்டு MURDER ஓவர்..! - அதிர்ச்சியில் பிக் பாஸ் HOUSEMATES வீடியோ