''நாக்க புடுங்குற மாதிரி இருக்கும்'' - பிக்பாஸ் குறித்து அக்ஷரா மற்றும் அபி கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல்  பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக தயாரித்திருக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார்.

Akshara Haasan speaks about kadaram Kondan and Bigg Boss 3

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

'தூங்காவனம்' படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து அக்ஷரா ஹாசன் மற்றும் அபி ஆகியோர் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் குறித்து இருவரிடமும் தொகுப்பாளர் அக்னி கேள்வி எழுப்பினார்.

முதலில் பதிலளித்த அக்ஷரா ஹாசன், 'படங்கள், டிராவல் போன்ற காரணங்களினால் இந்த பிக்பாஸ் 3 பார்க்க முடியவில்லை. தொகுப்பாளராக கமல்ஹாசன் சிறப்பாக பன்றார். ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்' என்றார்.

பின்னர் பதிலளித்த அபி, 'போன 2 சீஸனுமே பார்த்திருக்கேன். இந்த சீசன் பார்த்தே ஆகனுமேனு பார்த்துட்டு இருக்கேன். நல்லா இருக்கு. முதல் வாரமே அடிச்சிக்கிறாங்க. சண்டை நடக்குது. சனி, ஞாயிறுகளில் கமல் சார் வந்துட்டா போதும் அவர் கேக்குற கேள்வி நாக்கப்பிடுங்குற மாதிரி இருக்கும். சாண்டி மாஸ்டர் தான் எல்லாரையும் கலாய்ச்சுட்டு ஜாலியா இருக்கார்' என்றார்.

''நாக்க புடுங்குற மாதிரி இருக்கும்'' - பிக்பாஸ் குறித்து அக்ஷரா மற்றும் அபி கருத்து வீடியோ