அக்ஷய் குமார் நடித்து வெளியாகவிருக்கும் “மிஷன் மங்கல்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து அதிக உண்மை சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார். சானிட்டரி நாப்கின் விற்ற தமிழர் அருணாச்சலம் முருகானந்தம் கதையை தழுவி இவர் நடித்து வெளியான “பேட் மேன்” பலரால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து கோல்டு, கேசரி போன்ற உண்மை சம்பவங்கள் சார்ந்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார் அக்ஷய் குமார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து முதன்முதலில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைகோள் பற்றிய உண்மையை தழுவிய மற்றுமொரு கதையில் நடிக்கிறார் அக்ஷய் குமார். விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாப்பாத்திரத்தில் அக்ஷய் குமாரும், தாரா ஷிண்டேவாக வித்யா பாலனும் நடித்திருக்கிறார்கள். மேலும் டாப்ஸி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா போன்ற பிரபல கதாநாயகிகளும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஃபாக்ஸ் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஜெகன் சக்தி இயக்கியிருக்கிறார். இந்த படம் ஆகஸ்டு 15 “சுதந்திர தினம்” அன்று வெளியாக இருக்கிறது.
"செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் அக்ஷய் குமார்" மிஷன் மங்கல் ட்ரெய்லர் இதோ! வீடியோ