''யார உண்மையா Love பண்றீங்க ?'' - ரசிகரின் கேள்விக்கு கவினை கலாய்த்த கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. கடந்த வாரம் திங்கட்கிழமை எலிமினேஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது.

Kamal Haasan has fun with Kavin in Bigg Boss 3 promo

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் 2 பேரை நாமினேட் செய்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப்போகும் முதல் போட்டியாளர் யார் என்பது இன்று (ஜூலை 7) கமல் அறிவிப்பார் என்பதால் ரசிகர்கள் அதனை அறிந்துகொள்ள ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸின் புதிய புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், கிருத்திகா என்ற ரசிகை அலைபேசி மூலம் கவினிடம், ''பிக்பாஸ் வீட்டிற்குள் யாரை உண்மையாக காதலிக்கிறீர்கள்'' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கவின், ''நமக்கு மாமா பொண்ணுங்க இருந்தா எப்படி பழகுவோமோ அப்படித்தான் பழகி வருகிறேன் என்றார்.

அதை கேட்ட கமல், ''உங்களுக்கு கிருத்திகா என்ற பெயரில் மாமா பொண்ணு யாரும் இல்லைல?'' என்று நக்கலாக கேள்வி எழுப்பினார்.

''யார உண்மையா LOVE பண்றீங்க ?'' - ரசிகரின் கேள்விக்கு கவினை கலாய்த்த கமல் வீடியோ