"விட்டுருங்க Please"- அபிராமியை கெஞ்ச விட்ட வனிதா Bigg Boss 3 ப்ரோமோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 போட்டியாளர் அபிராமி கண்ணீர்விடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது..

Bigg Boss 3 Tamil Promo July 7th Abirami And Vanitha

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் இரண்டு வாரம் ஆகின்றது. இந்நிலையில் ஒரு போட்டியாளரை இன்று வெளியேற்றுவார்கள் .ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தன் கையில் உள்ள கார்டில் இருக்கும் பெயரை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு போட்டியாளர்களை பார்த்து உங்களுக்கும் காட்டட்டுமா என்று கேட்கிறார். அபிராமி முகத்தில் ஈயாடவில்லை. சாக்ஷி எதையோ பறிகொடுத்தது போன்று அமர்ந்திருக்கிறார்

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் அபிராமியை சக போட்டியாளர்களுக்கு மட்டும் இல்லை பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை. நான் இனி உன்னை நம்ப மாட்டேன். நீ திடீர்னு நல்லவள் ஆகிவிடுவாய். விளையாடுறியா நீ என்று வனிதா அபிராமியை பார்த்து கோபமாக கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. வனிதா திட்டியதை அடுத்து அந்த இடத்தில் இருந்து கிளம்பிய அபிராமி, எனக்கு வீட்டுக்கு போகணும், என்னை விட்டுடுங்க ப்ளீஸ், கெஞ்சிக் கேட்கிறேன் என்று கூறி கேமரா முன்பு அழுகிறார்.

"விட்டுருங்க PLEASE"- அபிராமியை கெஞ்ச விட்ட வனிதா BIGG BOSS 3 ப்ரோமோ இதோ வீடியோ