பிக்பாஸ் சீசன் 3யில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பாத்திமா பாபு. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு முதல் போட்டியாளராக வெளியேறிய பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குறித்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பற்றி குறிப்பிட்டு அவரை பற்றி கேள்வி எழுப்பட்டது. சேரன் பற்றி கேட்டபோது , உங்க பொண்ணாவே இருந்தாலும் லொஸ்லியாவ Physical-ஆ தொடாதீங்க சேரன். பொண்ணாவே இருந்தாலும் இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு. கண்ணத்தை பிடிச்சு அழுத்தி தேய்ப்பது எனக்கு பிடிக்கல சேரன் என்றார்.
''LOSLIYA-வ தொடாதீங்க சேரன்'' - BIGGBOSS 3 குறித்து FATHIMA BABU வீடியோ