விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஃபாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேறினார்.

இதனையடுத்து நேற்று (ஜூலை 8) போட்டியாளர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தனர். இதனையடுத்து அடுத்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் போட்டியாளர்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் விதிமுறையில் போட்டியாளர்கள் யாரும் ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கிய விதி.
இந்நிலையில் பிக்பாஸின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருந்தது. அதில் வனிதா ஸ்மோக்கிங் ரூமில் இருந்த படி பிக்பாஸூடன் செல்போனில் பேசுகிறார். எப்பொழுதுமே சீக்ரெட் டாஸ்குகள் Confession room-ல் தான் சீக்ரெட் டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இந்த முறை செல்போன் அவருக்கு சீக்ரெட் டாஸ்க்குகள் கொடுத்திருக்கார்.