Fakir Other Banner USA

இவ போதைக்கு நான் ஊறுகாயா? சீறும் வனிதா! சிணுங்கும் மீரா - பிக் பாஸ் வீட்டில் அடுத்த களேபரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Vanitha lashes out on Meera Mitun in todays episode, Bigg Boss 3 New Promo video is out

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 15 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16வது போட்டியாளராக மாடல் மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரது வருகை அங்குள்ள மற்ற மாடல் துறையைச் சேர்ந்த அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கு பிடிக்கவில்லை என்பன போன்ற கருத்துக்கள் நிலவினாலும், மீராவுக்கு பிக் பாஸ் வீட்டில் எதிர்ப்புகள் இருந்த வண்ணம் உள்ளது.

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோவில், வனிதா மற்றும் மீரா இடையில் இருக்கும் வேறுபாடுகள் கோபமும், அழுகையுமாக இருக்கிறது. இதில் மீரா சக போட்டியாளர்களிடம், ‘என்னை ஒரு நாளைக்கு ஒரு தடவ அழவைக்கலனா இவங்க யாருக்குமே தூக்கம் வராது. நான் இங்க வந்ததுல இருந்து எவ்ளோ வேலை செய்றேன்னு இந்த கேமராவுக்கு தெரியும். இப்படியெல்லாம் என்னால இருக்க முடியாது. அந்த மாதிரி என் கேரக்டர் கிடையாது’ என மீரா மிதுன் குமுறுகிறார்.

அதேபோல், வனிதாவும், ‘இவ போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது. கொடுக்க வேண்டிய இடத்துல கரெக்ட்டா கொடுப்பேன் நான். நமக்குலா பாப்புலாரிட்டி இல்லையா? பேக்கிரவுண்டு இல்லையா? அவ வளர்ச்சிக்கு நல்லா கண்டென்ட் தேடுறா’ என மீராவை சாடியுள்ளார்.

இந்த களேபரத்துக்கு காரணம் வனிதா கொடுத்த வேலையை மீரா செய்யாததா என்பது இன்றைய எபிசோட்டில் தெரியவரும்.