இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் பாப் பாடகராக அறிமுகாகியுள்ள பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த வீடியோவிற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த மியூசிக் வீடியோவில் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் நடித்துள்ளார். வித்தியாசமான ஸ்டைலிஷ் லுக்கில் அமீன் நடித்துள்ள 7அப் மெட்ராஸ் ஜிக் சீசன் 2-வின் ‘சகோ’ பாடல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளார். விவேக் மற்றும் ஏடிகே பாடல் எழுதியுள்ளனர். நட்பை பற்றிய இப்பாடலில் அமீன் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறார். கேமியோ ரோலில் ஏ.ஆர்.ரகுமானும் இந்த மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.
அப்பா மியூசிக்கில் ஏ.ஆர்.அமீனின் மேஜிக்கல் மியூசிக் வீடியோ இதோ! வீடியோ