www.garudabazaar.com

வலிமை முதல் BEAST வரை.. தற்செயலா? திட்டமிடலா? 'செம்ம PLAN' ரசிகர்களுக்கும் தியேட்டர்களுக்கும் HAPPY!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை முதல் பீஸ்ட் படம் வரை தயாரிப்பாளர்கள் வினியோகஸ்தர்கள் நன்கு திட்டமிட்டு படங்களை வெளியிட உள்ளன.

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஜனவரி மாதம் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்தது, இந்த காரணிகள் சமீபத்திய படங்களின் வசூலை பாதித்துள்ளன.

தற்போது கொரோனா பரவல் குறைவதால் கொரோனாவால் முடங்கியிருந்த தமிழ் சினிமா புதிய படங்களின் ரிலீஸ் அறிவிப்பால்  தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.பிப்ரவரி முதல் அடுத்தடுத்து பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீசாக உள்ளன. இதனால் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளன. 

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

பண்டிகை நாட்களில் தமிழ் சினிமாவின் வருவாய் என்பது பல கோடிகளை தொடும், இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல தொழில்கள் நடக்கும். சினிமா திரையரங்குகள் மூடல் என்பது சினிமா சார்ந்த மற்ற தொழில்களையும் முடக்கி போடும். அரசுக்கு கேளிக்கை வரி, GST வரி, உள்ளாட்சி வரி போன்ற வரிகளின் வருவாயும் தடை படும். கடந்த இரண்டு வருடங்களாக திரையரங்குகள் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த வருடம் தொடக்கத்தில் சிறிய பட்ஜெட் படங்களால் போதிய வருமானம் தியேட்டர் வட்டாரங்களில் திரட்டப்படவில்லை. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வருவாய் கிடைக்காமல் போயுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை (தமிழ் புத்தாண்டு) , பூஜை விடுமுறை நாட்களில் அதிக வசூல் இருக்கும்.

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

வசூலுக்கு காரணம், திருவிழா காலங்களில் மக்களின் வாங்கும் திறன் அதிகமாக இருக்கும். இந்த வாங்கும் திறன் ஜனவரி, ஏப்ரல், செப்டெம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சமாக இருக்கும். இந்த மாதங்களில் வரும் படங்கள் அதிகப்ட்சம் தோல்வி அடையாமல் தப்பிக்க வாய்ப்பு அதிகம், காரணம் மக்களிடம் உள்ள பணப்புழக்கம்.

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

ஆனால் இந்த வருட பொங்கலில் (ஜனவரி) போதுமான வசூல் திரையரங்குகளுக்கு வரவில்லை. எனவே இதனை அடுத்து வரும் படங்களான வீரமே வாகை சூடும், FIR, வலிமை, ET, ராதேஷ்யாம், RRR, டான், KGF-2, பீஸ்ட், விக்ரம், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் வெளியீட்டுக்கு திரையரங்க உரிமையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த படங்களில் சில படங்கள் ஒரே நாளில் வெளியானால் மிகப்பெரிய அளவில் பணப்பகிர்வு நடக்காமல் போகும். திரையரங்க வசூல் அனறைய குறிப்பிட்ட நாளில் மோதும் படங்களில் ஏதேனும் ஒரு படத்தையோ அல்லது இரண்டு படத்தையோ பாதிக்கும்.  இசூழலில் திட்டமிட்டபடி ஒவ்வொரு படங்களும் சரியாக இரண்டு வார இடைவெளியில் வெளியாக உள்ளன. வலிமை வெளியான இரண்டு வாரத்தில் ET, ETக்கு பின் இரண்டு வாரத்தில் RRR, RRR வெளியான இரண்டு வாரத்தில் KGF -2. 

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

இதில் லைக்கா தயாரிப்பான Don, லைக்க வினியோகம் செய்யும் RRR ஒரே நாளில் வெளியாகாமல் இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதிக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது, அதே போல விருமன், விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் ரிலீஸ் தேதிக்கும் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றன.

அடுத்தடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. இனி ஜமாய் தான்!

மேலும் செய்திகள்

Valimai to Beast Theaters and Distributors Plan for Releases

People looking for online information on Ajith Kumar, Beast, Don, ET, KGF Chapter2, Radhe Shyam, RRR, Suriya, Valimai, Vijay will find this news story useful.