40 YEARS OF மூன்றாம் பிறை:சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய போட்டியை அறிவித்த பாலு மகேந்திரா நூலகம்!
முகப்பு > சினிமா செய்திகள்"மூன்றாம் பிறை" ஒரு கீர்வாத்கோ கவிதை.. மிக அரிதாக மலையாளத்தில் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட ரஷியக் கவிதையை ஒரு மழைநாளில் படிக்கையில் வரும் களிப்பு "மூன்றாம் பிறை" காண்கையில் கிடைக்கும். தமிழ் சினிமாவின் அரிதான சம்பவம்.. அதற்கு முன்பும். அதற்குப் பிறகும். - அடூர் கோபாலகிருஷ்ணன் உதிர்த்த வார்த்தைகள் இவை.
மார்ஃப் செய்த மாளவிகா மோகனன் ஆபாச PHOTO: முன்னணி செய்தி நிறுவனத்திற்கு எதிராக கொந்தளித்த நடிகை
அந்த அளவுக்கு இந்திய திரையுலகில் மூன்றாம் பிறையும் சத்மாவும் தாக்கத்தை ஏற்படுத்தின. மூன்றாம் பிறை படம் வெளியாகி இம்மாதத்துடன் 40 வருடம் ஆக உள்ளதை பெரு விழாவாக பாலு மகேந்திரா நூலகம் கொண்டாட இருக்கிறது. இது குறித்து போட்டியையும் ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது பாலு ம்கேந்திரா நூலகம். மேலும் இது குறித்த அறிவிப்பையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
மூன்றம் பிறை 40 ம் ஆண்டு கொண்டாட்டம்
விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு: பாலுமகேந்திரா நூலகம் அறிவிப்பு
சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982 ல் வெளியான மூன்றாம்பிறை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. . ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ..
இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .இந்த மலரில் படத்தில் இடம் பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம்.
அதன் பொருட்டு மூன்றம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பவேண்டும் இக் கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், .. ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன ..
தேர்வு செய்யப்படும் .பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ருபாய். பரிசளிக்கப்படும். அது மட்டுமல்ல படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம்.
உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப் பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமகவோ அல்லது ஈ மெயில் முகவரி வழி இணையம் வழியிலோ அனுப்பலாம் புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருநதால் பிரசுரத்துக்கு ஏற்கப்பட மாட்டது .இறுதி தேதி 12.02.2022.
முகவரி: பாலு மகேந்திரா நூலகம், மகாலட்சுமி அடுக்ககம் , 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை
Email: balumahendralibrary@gmail.com
பேச: 9884060274
என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sasikumar Shares An Emotional Post About Director Balu Mahendra
- Director Ram Talks About Balu Mahendra
- 4 Years Since The Demise Of Legendary Director Balu Mahendra
- Kamal Haasan On The Third Death Anniversary Of Balu Mahendra
- Balu Mahendra's Disciple Directs Thappu Thanda
- Balu Mahendra Knowledge Center At BOFTA, Chennai
- The Irreplaceable Films Of Balu Mahendra Are Etched In Our Memories
- The Legendary Balu Mahendra's Last Outing
- Late Director Balu Mahendra's Dreams 'no More'
- Important Personalities From The Tamil Film Industry Will Come Together For Balu Mahendravin Kanavu
- Director Bala Talks Of His Close Relationship With The Late Balu Mahendra
- Celebrities Pay Respects To Director Balu Mahendra
தொடர்புடைய இணைப்புகள்
- ரஜினியை கலாய்த்த அமீர்.. கைதட்டி ஆரவாரம் செய்த சீமான் - Latest Speech
- Balu Mahendra-Kamal Hassan And Sridevi For Sadma (Moondram Pirai Remake) | Kollywood Directors-Bollywood Superstars: The Blockbuster Combinations - Slideshow
- Moondram Pirai | 150 All-Time Best Cult Tamil Films by Behindwoods | Part 02 - Slideshow
- Moondram Pirai | 12 Sridevi Movies that will make you miss her more - Slideshow
- Moondram Pirai | - Slideshow
- Moondram Pirai | Popular Kollywood breakups that left your eyes wet! - Slideshow
- Soori | RIP SP Balasubrahmanyam - Compilation of celebrity condolence messages | Part 2 - Slideshow
- Soori | HBD Thalapathy: "Design, Design-ah" wishes pouring in for Vijay's birthday! Nanbas do not miss them! - Slideshow
- Soori | Corona: PM Modi, Actors, Sportsmen share photos with candles, diyas and torchlights. - Slideshow
- Soori | Rajinikanth's co-stars: From Nagesh to Yogi Babu, Superstar's super-fun companions! - Slideshow
- Soori | Ultimate Pongal 2020 Photo Album - Here's how your favorite stars celebrated Pongal this year!!! - Slideshow
- Soori | Rajinikanth's Darbar: Celebrities react! - Slideshow