www.garudabazaar.com

ரஜினி, விஜய், சூர்யா பட ஒளிப்பதிவாளர் இயக்கும் புதிய படம்.. விஜய் ஆண்டனி தான் ஹீரோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை ரஜினி, விஜய், சூர்யா நடித்த படங்களின் ஒளிப்பதிவாளர் இயக்க, இருமுகன், புலி ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Vijay Antony in the new film directed by cinematographer Santosh Sivan

இயக்குனர் மணிரத்னத்திற்கு புனே MIT பல்கலைக்கழகம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்! முழு விபரம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களில் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. தமிழின் முதல் ஸ்பூஃப் திரைப்படமாக 'தமிழ்ப் படம்' மூலம் இயக்குநராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் ஆகிய படத் தலைப்புகள் கவனம் பெற்றது போன்று, 'ரத்தம்' தலைப்பும் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்ககப்படுகிறது.

Vijay Antony in the new film directed by cinematographer Santosh Sivan

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அருண் விஜய்யுடன் அவர் நடித்துள்ள 'அக்னி சிறகுகள்' படமும் முடிந்துவிட்டது. கொலை, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல போன்ற வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சலீம்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தை விஜய் மில்டன் இயக்க விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். 2022ம் ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், விஜய் ஆண்டனி தனது ரசிகர்களுக்கு அடுத்த பெரிய சர்ப்ரைஸ் தந்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான சந்தோஷ் சிவன் ISC ASC இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தினை இருமுகன், புலி ஆகிய படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இப்படம் தமிழ், இந்தி என பைலிங்குவல் படமாக வெளியாக உள்ளன. இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இந்தி திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார்.

Vijay Antony in the new film directed by cinematographer Santosh Sivan

சந்தோஷ் சிவன்

பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, இருவர், உயிரே,  ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன் ISC ASC. விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி, சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களுக்கு அவரே ஒளிப்பதிவாளர்.  சந்தோஷ் சிவன்ISC ASC ஒளிப்பதிவையும் தாண்டி, இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என்று, சினிமா உலகில் தன்னுடைய திறமையை பல்வேறு வகையிலும் வெளிக்காட்டியவர். ஷாருக்கான், அஜித் நடித்த அசோகா படத்தை இயக்கியுள்ளார்.

Vijay Antony in the new film directed by cinematographer Santosh Sivan

கடந்த 2017-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாநகரம் திரைப்படம், இந்தியில் 'மும்பைகர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தினை சந்தோஷ் சிவனே ISC ASC இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரே மற்றும் சச்சின் கடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.

"வலிமை" ரிலீஸ் தேதி இது தான்! புதிய போஸ்டருடன் போனிகபூர் வெளியிட்ட OFFICIAL அப்டேட்!

Vijay Antony in the new film directed by cinematographer Santosh Sivan

People looking for online information on விஜய் ஆண்டனி, ஷிபு தமீன்ஸ், Cinematographer Santosh Sivan, New film, Shibu Thameens, Vijay Antony will find this news story useful.