www.garudabazaar.com

'Don' - ரிலீஸ் தேதி சொன்ன மறுநாளே இப்டி ஒரு அப்டேட்டா??.. குஷியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அடுத்ததாக வெளிவர இருக்கும், 'டான்' திரைப்படம் குறித்து, அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

sivakarthikeyan don movie update about next song

கடந்த ஆண்டு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த 'டாக்டர்' திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. 100 கோடி ருபாய் வரை வசூல் செய்த இந்த திரைப்படம், அனைத்து விதமான ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது.

அதே போல, கடந்த ஆண்டின் சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாகவும், 'டாக்டர்' விளங்கியது.

ரிலீஸுக்கு தயார்

இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக, 'டான்' என்னும் திரைப்படம், ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை, லைக்கா நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. மேலும், அட்லீயின் உதவியாளரான சிபி சக்ரவர்த்தி, இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

sivakarthikeyan don movie update about next song

வைரல் 'ஜல புல ஜங்'

பிரபல இசையமைப்பாளர் அனிருத், டான் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ஜல புல ஜங்' வெளியாகி, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இன்று வரை ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்கப்பட்டு வரும் இந்த பாடலை, டிரெண்ட்டிற்கு ஏற்றார் போல, அனிருத் அமைத்திருந்தார். இந்த பாடலின் வெற்றியால், டான் படத்தின் மற்ற பாடல்கள் எப்போது வெளிவரும் என்றும், ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இரண்டாவது பாடல்

இந்நிலையில், டான் படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளிவரும் என்பது பற்றிய அப்டேட், தற்போது வெளியாகியுள்ளது. 'Bae' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த பாடல், பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை, ஆதித்யா பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

 

sivakarthikeyan don movie update about next song

 

மீண்டும் ஜோடியான பிரியங்கா மோகன்

'டான்' திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஏற்கனவே 'டாக்டர்' படத்தில் ஜோடி சேர்ந்த பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்துள்ளார். மேலும், இவர்களுடன், S J சூர்யா, சிவாங்கி, சூரி, சமுத்திரக்கனி, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படம், மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan don movie update about next song

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, Cibi Chakravarthi, Doctor Tamil, Don, Don Update, Priyanka Mohan, Second Single, Sivakarthikeyan, Sj suryah will find this news story useful.