www.garudabazaar.com

'பத்து தல' படத்தின் புதிய போஸ்டருடன் வெளியான கொல மாஸான GLIMPSE வீடியோ! STR Fans-க்கு பெர்த் டே ட்ரீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும், புதிய லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளன.

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

அடுத்தடுத்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் மாஸ் ஹீரோ படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!.. இனி ஜமாய் தான்!

தற்போது சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். 'மஃப்ட்டி' படம் 2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

ஸ்டூடியோ கிரீன் K. E ஞானவேல் ராஜா தயாரிப்பில், சில்லுனு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவும், கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.   இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'பத்து தல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

கொரோனா காரணமாக பத்து தல படத்தின் படப்பிடிப்பு தாமதமான நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L இணைந்துள்ளார். இதை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எடிட்டராக பிரவீன் கேல் பணியாற்றி இருந்தார்.

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

இந்நிலையில் இன்று (03.02.2022) சிம்பு தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பத்து தல படத்தின் புதிய சிம்பு போஸ்டரையும், படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் முன்னோட்ட GLIMPSE வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தாதாவாக சிம்பு இந்த படத்தில் தோன்றுகிறார். சிம்புவுக்கு செம மாஸாக வீடியோவில் தோன்றுகிறார். மாஸ் காட்சிகளால் கிளிம்ப்ஸ் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

போஸ்டரும் நியோ நாய்ர் வகை படங்களுக்கேற்ற மோனோ க்ரோம் வண்ணத்தில் கருப்பு வெள்ளையாக அமைந்துள்ளது.

மார்ஃப் செய்த மாளவிகா மோகனன் ஆபாச PHOTO: முன்னணி செய்தி நிறுவனத்திற்கு எதிராக கொந்தளித்த நடிகை

'பத்து தல' படத்தின் புதிய போஸ்டருடன் வெளியான கொல மாஸான GLIMPSE வீடியோ! STR FANS-க்கு பெர்த் டே ட்ரீட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

powerful Glimpse from Pathu Thala Movie for STR Birthday

People looking for online information on First Look of Paththu Thala, Gautham Karthik, Glimpse, Maanaadu, Paththu thala, Pathu Thala, Praveen KL, Silambarasan TR, Silambarsan, STR birthday will find this news story useful.