சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்' - வெறித்தனமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

Superstar Rajinikanth and AR Murugadoss's Darbar first look poster released

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க , சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 10 முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 8.30 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'தர்பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் துப்பாக்கிகள், வேட்டை நாய் புடை சூழ வெறித்தனமாக ரஜினிகாந்த் காட்சியளிக்கிறார். இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கலாம் என்பதை கணிக்க முடிகிறது.