பண்டிகை தேதியை லாக் செய்த சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Rajinikanth-AR Murugadoss's next titled as Darbar, film releasing on Pongal 2020

‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 167’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் ஏப்.10ம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இன்று பிற்பகல் மும்பை செல்லவிருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 167’ என்ற இப்படத்திற்கு ‘தர்பார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘பேட்ட’ திரைப்படத்தை போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.