சூப்பர் ஸ்டாரின் தர்பாருடன் மோதும் யோகிபாபுவின் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் உருவாகிவரும் பெரும்பாலான படங்களில் யோகிபாபுவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவரது வித்தியாசமான உடல் மொழி, அலட்டிக்கொள்ளாமல் பேசும் வசனங்கள் ஆகியவற்றிற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது.

Yogi Babu's new movie will release in Pongal with Rajinikanth's Darbar

பிரபல நடிகர்கள் அஜித், விஜய் முதல் சிறு பட்ஜெட் படங்கள் என பாகுபாடின்றி தனது பங்களிப்பை சிறப்பாக செய்துவருகிறார் யோகிபாபு. இந்நிலையில் முதன் முறையாக அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் எம்.ராஜேஷின் உதவியாளர் ராஜசேகர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.  மேலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரஜினிகாந்தின் தர்பார் படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.