நடிகர் பார்த்திபன் சினிமாவில் ஒரு தனி திறமையான கலைஞர். அவரின் படங்களில் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கிறது.
![r parthiban tweet about his experience with kalaignar karunanidhi r parthiban tweet about his experience with kalaignar karunanidhi](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/r-parthiban-tweet-about-his-experience-with-kalaignar-karunanidhi-photos-pictures-stills.jpg)
அவரின் பேச்சிலும் ஆழமான விசயம் இருக்கும். டிவிட்டரில் அவரின் பதிவுகள் கொஞ்சம் இண்டிரஸ்டிங் தான். அவரின் மகளின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
தான் விரும்பியபடி நடிகர் சங்கம் சார்பாக இளையராஜாவுக்கான இசை விழாவை நடத்திவிட்டார். ஆனால் அதில் அவர் கலந்துகொள்ளாதது பலருக்கும் வருத்தமே. அண்மையில் கோவை சென்றுள்ளார். அங்கு அவருக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு சீட்டில் அவர் உட்கார மறுத்துவிட்டாராம்.
காரணம் அது மறைந்த கலைஞர் கருணாநிதி பயன்படுத்திய இருக்கையாம். இதுகுறித்து மகிழ்ச்சியாக அவர் டிவட்டரில் அவரின் ஸ்டைலில் பதிவிட்டுள்ளார் பாருங்கள்.
கோவையில் எனக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய (கலைஞர் பயன்படுத்தியது) அவ்விருக்கைக்கென ஒரு தலைவர் இருக்கையில் நான் அமரமாட்டேன் எனக்கூறி
அடுத்தமர்ந்தேன்!மதிக்கப்பட்ட -வரின் நினைவாக அதை வாங்கியவர் என் மதிப்புக் குள்ளானார்,சச்சின் காரை வாங்கி என் நட்புக்குள்ளானார்!Green crest வாழ்க pic.twitter.com/pR2bjostPj
— R.Parthiban (@rparthiepan) May 16, 2019