#Psycho- பார்வையற்ற மாணவர்கள்... உருகி போன உதயநிதி... கலங்க வைக்கும் வீடியோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ படத்தை பார்வையற்ற மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.

udhayanidhi stalin shares a video on psycho unna nenachu song

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. சைக்கோ கொலைகாரனை தேடும் கண் பார்வை இல்லாத இசை கலைஞனாக உதயநிதி இப்படத்தில் நடித்திருந்தார். படம் பார்த்த பலரும் அவரது நடிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இளையராஜா இசையில் உன்னை நினைச்சு பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

இந்நிலையில் லயோலா கல்லூரியை சேர்ந்த கண் பார்வை தெரியாத மாணவர்கள் உதயநிதியை சந்தித்துள்ளனர். சைக்கோ படத்தை பார்த்த அவர்கள் உதயநிதியை பாராட்டியதோடு, இளையசெல்வம் எனும் மாணவர், உன்னை நினைச்சு பாடலை பாடி காட்டியுள்ளார். இதை கேட்ட உதயநிதி உருகி போனதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor