மிஷ்கினின் 'சைக்கோ' பட கவுண்டமணி வெர்ஷன் வீடியோ - உதயநிதியின் ரியாக்சன் என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'சைக்கோ' படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் சில கேள்விகளை முன் வைத்தனர். இதனையடுத்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

இந்த படத்தில் 'நீங்க முடியுமா' பாடல் இடம் பெற்ற இடம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது உதயநிதி அந்த பாடலின் கவுண்டமனி வெர்ஷனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'சின்னத்தம்பி' படத்தில் கண் தெரியாமல் கவுண்டமனி பைக் ஓட்டுவார் அந்த வீடியோவை நீங்க முடியுமா பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 'சைக்கோ' படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ், ராஜ்குமார், இயக்குநர் ராம், பவா செல்லத்துரை, ஷாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க, தன்வீர் மிர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
— Udhay (@Udhaystalin) January 28, 2020