வெற்றிமாறனின் Grass Root Film Company வழங்கும் திரைப்படம் ’பாரம்’. தேசிய விருது வென்ற இந்த படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கியுள்ளார். முதிர் வயது பெற்றோரை கைவிடும் ஈரமற்ற மனங்களை விசாரணை செய்யும் கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.
![Baaram movie press meet Mysskin emotional speech Vetri Maaran Ram Baaram Baaram movie press meet Mysskin emotional speech Vetri Maaran Ram Baaram](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/baaram-movie-press-meet-mysskin-emotional-speech-vetri-maaran-ram-baaram-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்காக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர்கள் மிஷ்கின், ராம், வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் இயக்குநர் மிஷ்கினின் துடிப்பான பேச்சு இடம்பெற்றது. தன் முதல் திரைப்படமான ’சித்திரம் பேசுதடி’ ஸ்ட்ரீனிங் அனுபவத்தை பேசிய அவர், ’பாரம்’ தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத படங்களில் ஒன்று என தெரிவித்தார்.
மேலும் அந்த படம் தனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை அழுத்தமான உதாரணங்களோடு பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார். இந்த காணொலியைக் காண கீழ்க்காணும் வீடியோவை சொடுக்கவும்.
மிஷ்கின் உருக்கம் ’குடிச்சிட்டு நேரா அவங்க வீட்டுக்கே போயிருப்பேன்’! வீடியோ
Tags : Mysskin, Vetri Maaran, Ram, Baaram