ஹெச்.ராஜா இயக்குநர் மிஷ்கின் மீது பாய்ச்சல் ‘இந்து மதம் மீதான தாக்குதலை பொறுக்க முடியாது!’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதரி, நித்யா மேனன் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய திரைப்படம் சைக்கோ. கடந்த மாதம் வெளியான அந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Mysskin Psycho movie criticized by BJP national Secretary H.Raja in Twitter

புத்தர்-அங்குலிமாலா, சீதை, ஹனுமான், இயேசு கிறிஸ்து ஆகியோரின் தாக்கத்துடன் அப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் உருவாக்கப் பட்டிருக்கும். ஒரு சீரியல் கில்லரின் கதையை இப்படம் மையமாக கொண்டிருப்பதால் அதிக வன்முறை காட்சிகள் நிறைந்துள்ளது. இதை கர்பிணிகள் பார்க்க வேண்டாம் என இயக்குநர் மிஷ்கின் பல பேட்டிகளில் எச்சரிக்கை செய்திருந்தார்.

இந்நிலையில், பாஜக கட்சியின் தேசிய செயலாளராக உள்ள ஹெச்.ராஜா மிஷ்கின் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் ‘இராமாயணத்தை இழிவாகப் பேசிய சைக்கோ சினிமா இயக்குனர் மிஷ்கினின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தின் மீது மற்றும் மதத்தினர் மீது தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்க க் கூடாது. சரியான எதிர்வினையாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 

Entertainment sub editor