அடுத்தடுத்து மணிரத்னம் மற்றும் அதர்வா படங்களில் ஒப்பந்தமான தனுஷ் பட வில்லன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா மற்றும் ‘பிரேமம்’ நாயகி அனுபமா ஜோடி சேர்ந்து நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் அமிதாஷ் பிரதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

VIP fame Amitash Pradhan roped in for R.Kannan's Atharva film

மசாலா பிக்ஸ் மற்றும் எம்கேஆர்பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக அமிதாஷ் பிரதான் நடிக்கவிருக்கிறார். தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அமிதாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மட்டுமல்லாமல் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை தனசேகரன் இயக்கி வருகிறார்.