ஷாலினியின் பிறந்தநாள் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த தல ரசிகர்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 20, 2019 12:22 PM
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறு வயது முதலே நடித்து வருபவர் நடிகை ஷாலினி. பின்னர் ஹீரோயினாக காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, அமர்களம் என உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

பின்னர் நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் அவரது ரசிகர்கள் காட்டும் அன்பு குறையவில்லை. அவரது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 20) அவரது பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் HBDShaliniAjith என்ற ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ் டேக் சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
இதனையடுத்து டிவிட்டர் மூமென்ட் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துடன் ஷாலினி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'பிறந்தநாள் வாழத்துகள் ஷாலினி' என்று குறிப்பிட்டுள்ளது.
Happy birthday Shalini! #HBDShaliniAjith https://t.co/gcGv5ugtee
— Twitter Moments India (@MomentsIndia) November 20, 2019