அனுஷ்கா-மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ டீசர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 07, 2019 11:59 AM
ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Nishabdham TEASER R Madhavan, Anushka Shetty, Shalini Pandey Nishabdham TEASER R Madhavan, Anushka Shetty, Shalini Pandey](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/nishabdham-teaser-r-madhavan-anushka-shetty-shalini-pandey-photos-pictures-stills.png)
பாகமதி’, ‘சைரா’ திரைப்படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘நிசப்தம்’ திரைப்படத்தில், வாய் பேசாத காது கேளாத ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். சாக்ஷி என்ற கதாபத்திரத்தில் அனுஷ்கா ஓவியம் வரைவது போன்று போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தது. நிசப்தம்
‘இரண்டு’ படத்திற்கு பிறகு ‘நிசப்தம்’ படத்தில் மீண்டும் மாதவனுடன் அனுஷ்கா இணைந்து நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் மகா என்ற கதாபாத்திரத்தில் புலனாய்வு அதிகாரியாக நடிகை அஞ்சலி நடித்துள்ள கேரக்டர் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், சஸ்பன்ஸ் ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது
அனுஷ்கா-மாதவன் நடிக்கும் ‘நிசப்தம்’ டீசர் இதோ! வீடியோ